ஒரே கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா: தடை செய்யப்பட பகுதியாக அறிவிப்பு!

ஒரே கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா: தடை செய்யப்பட பகுதியாக அறிவிப்பு!

மதுரை அருகே ஒரே கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள பொன்னமங்கலம் என்ற கிராமத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து பரிசோதனைக்கு பின்பு 50க்கும் மேற்பட்டோர் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக சுகாதார துணை அறிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து இருந்தனர். ஆனால் அரசு ஆம்புலன்ஸ் வர தாமதமானதை அடுத்து அந்த கிராம மக்களே தனியாக இரண்டு ஆம்புலன்சை வரவழைத்து கும்பலாக சிகிச்சை மையத்திற்கு சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு ஆம்புலன்சில் தலா இருபதுக்கும் மேல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்கும்போது கேட்டபோது எங்களை கேட்காமலே கிராமத்தினர் தனியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்துச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு கிராமத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com