சென்னையின் 2 மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 100 பேர் உயிரிழப்பா?

சென்னையின் 2 மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 100 பேர் உயிரிழப்பா?

சென்னையின் இரண்டு மருத்துவமனைகளில் மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிர் இழந்து வருவதாகவும் ஆனால் இதில் பல இறப்புகள் கணக்கில் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதே போல் கொரோனா வைரஸால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தெரிய வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மற்றும் ஸ்டான்லி ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 100க்கும் மேல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com