சென்னையில் நடமாடும் காய்கறி கடை: விலை என்ன தெரியுமா?

சென்னையில் நடமாடும் காய்கறி கடை: விலை என்ன தெரியுமா?

தமிழகத்தில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட எந்த கடைகளை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி குவித்தனர். பொதுமக்களின் தேவையை கணக்கில் கொண்ட வியாபாரிகள் காய்கறி விலையை பல மடங்கு உயர்த்தினர்.

குறிப்பாக வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு ஆகியவை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மற்ற காய்கறியின் விலை ஐம்பது அறுபது ரூபாய் என வாய்க்கு வந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெங்காயம் தக்காளி கத்திரிக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளின் தொகுப்பு ரூ.105க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்ள விலை பட்டியல் இதோ:

இந்த காய்கறிகளை வாங்கிய பொதுமக்கள் காய்கறிகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் நல்ல முறையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை போல் தமிழகம் முழுவதிலும் காய்கறிகள் தமிழக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com