மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா விலகல்- இதுதான் காரணமாம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பத்மபிரியா விலகல்- இதுதான் காரணமாம்!

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரபல யூடியூபர் பத்மபிரியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மய்யம் கட்சியில் சேர்ந்த அவர், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவர் 33,401 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு வந்தார்.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து வெளியேறுவது குறித்து, 'அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு, என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்' என்று விளக்கம் கொடுத்துள்ளார் பத்மபிரியா.

சில நாட்களுக்கு முன்னர் மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், கமலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வெளியேறினார். அதேபோல கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

மய்யம், தான் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் 4 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே அந்தக் கட்சி பெற்றது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com