கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி- முதல்வர் ஸ்டாலின், பிரமருக்கு கடிதம்!

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி- முதல்வர் ஸ்டாலின், பிரமருக்கு கடிதம்!

இந்திய அளவில் கொரோனா தொற்றுப் பரவல் மிகவும் அதிகமாக இருக்கும் சூழலில், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

'கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு, உலகளாவிய டெண்டரை கோர உள்ளது. இப்படியான சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்தும் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com