கொரோனா நிதி கொடுக்க வருபவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த முதல்வர்!

கொரோனா நிதி கொடுக்க வருபவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த முதல்வர்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து கொரோனா நிதி கொடுப்பவர்களின் கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதை செய்திகளில் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதி கொடுக்க தன்னை சந்திக்க வருபவர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு பணிகளுக்காக கருணை உள்ளத்துடன் முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வழங்கி வருகின்றனர். இதன் பொருட்டு என்னை சந்திக்கவும் வாழ்த்து தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து பொன்னாடை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் கிருமி மிக வேகமாக பரவி வரும் இந்த நிலையில் பூங்கொத்து, பொன்னாடை போடுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் முதல்வரை சந்தித்தபோது கூட பூங்கொத்து கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com