கொரோனா நிதி வழங்கிய வாட்ச்மேனை நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா நிதி வழங்கிய வாட்ச்மேனை நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்கொள்ள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த திங்கட் கிழமை முதல் மாநிலம் தழுவிய அளவில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

முதல் சில நாட்களில் ஊரடங்கு விதிமுறைகளை பலர் சரியாக பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறை தரப்பும் அரசு தரப்பும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் கடந்த மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனாவை எதிர்கொள்ளும் பொருட்டு அடுத்தடுத்துப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக, 'கொரோனாவை எதிர்கொள்ள முதல்வர் நிவாரண நிதி' அளியுங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு நடிகர்கள் அஜித், சூர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பெரும் தொகைகளை நிதியாக வழங்கி வருகிறார்கள். அவர்களைப் போலவே, சென்னை, சாலிகிராமத்தில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவுக் காவலராகப் பணிபுரிந்த வரும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கதுரையும் ஒரு சிறிய தொகையை நிதியாக வழங்கியுள்ளார்.

இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து நன்றி தெவித்துக் கொண்டதோடு, அவருக்கு தனது அன்புப் பரிசாக புத்தகம் ஒன்றையும் வழங்கினார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com