தமிழக மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை- அரசு அறிவிப்பு!

தமிழக மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில், மீனவக் குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

'கடல் மீன் வளத்தைப் பேணிக் காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 ஆம் நாளன்று தொடங்கி ஜூன் 14 ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 ஆம் நாளன்று தொடங்கி ஜூலை 31 ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 1.72 லட்சம் கடல் மீனவக் குடும்பங்களுக்கு மீன் பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

இந்த நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்'

இவ்வாறு அரசு கூறியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com