ரூ.1617 கொரோனா நிதி அளித்த சிறுமிக்கு லேப்டாப் பரிசளித்த முதல்வர்!

ரூ.1617 கொரோனா நிதி அளித்த சிறுமிக்கு லேப்டாப் பரிசளித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்களும் நிதி வழங்க வேண்டும் என்றும் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் புலம்பெயர் தமிழர்கள் ஏராளமாக நிதி வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கி வருவது குறித்து செய்தியும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சிந்துஜா என்பவர் தான் சிறுக சிறுக உண்டியலில் சேர்த்து வைத்த ரூபாய் 1,617ஐ முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு அனுப்பியிருந்தார். இந்த தகவல் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூபாய் 1,617 பணத்தை கொரோனா நிதிக்கு அனுப்பிய 10 வயது சிறுமி சிந்துஜாவை பாராட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த சிறுமிக்கு லேப்டாப் ஒன்றை வழங்கியுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழும் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com