'எங்களுக்கு நீட் தேர்வே வேணாம்!'- அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

'எங்களுக்கு நீட் தேர்வே வேணாம்!'- அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்வு அவசியமில்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'நாங்கள் முதலில் இருந்தே நீட் தேர்வை எதிர்க்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 12வது வகுப்புப் பொதுத் தேர்வே மருத்துவப் படிப்புக்குப் போதுமானது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. மத்திய அரசு, அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும்.

அதேபோல புதிய கல்விக் கொள்கையையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதைப் பற்றியும் முன்னர் இருந்தே எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

முன்னதாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில அளவில் பொது நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் மாணவர்களை தேர்வு செய்யலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால், அமைச்சர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வே போதும் என்பதை உறுதிபட கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com