'முகக் கவசம் அணியாமல் வந்தால் பொருட்கள் இல்லை'- அரசு எச்சரிக்கை

 'முகக் கவசம் அணியாமல் வந்தால் பொருட்கள் இல்லை'- அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் நேற்று முதல் அதிக கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் பால் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே இயல்பாக செயல்பட அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல நியாய விலைக் கடைகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகளை விற்பனை செய்ய நடமாடும் காய்கறி வாகனங்கள், அரசு சார்பில் அமர்த்தப்பட்டு உள்ளன. இந்த காய்கறி வாகனங்கள் மூலம் விலைகள் முறைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்ட காய்கறி வாகனங்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 'மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நடமாடும் காய்கறி கடைகள் அமர்த்தப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் பொருட்கள் வாங்க விரும்பும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் வர வேண்டும். மாஸ்க் இல்லாமல் வந்தால் பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com