விமானத்தில் நடைபெற்ற திருமணம்.. விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்துத் துறை!

விமானத்தில் நடைபெற்ற திருமணம்.. விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்துத் துறை!

திருமணத்தில் கொரோனா விதிகள் மீறப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்தது.

ஊரடங்கு காலத்தில் விமானத்தில் திருமணம் செய்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கட்டை அதிபர் ஒருவர், தனது மகனின் திருமணத்தை வித்தியாசமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார். அதற்காக மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமான ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் திருமணத்தையும் நடத்தியுள்ளனர்.

திருமணம் செய்ததற்கான புகைப்படம், வீடியோ காலை முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாக வைரலானது மட்டுமல்லாமல் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.

இந்த திருமணத்தில் கொரோனா விதிகள் மீறப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் விமானத்தில் திருமணத்தை நடத்த அனுமதி அளித்த தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு விசாரணைக்கு வருமான விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விமானத்தில் திருமணம் செய்ய அனுமதித்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இந்த திருமணத்தில் விமானத்தில் 161 நபர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com