அவகாசம் தர முடியாது: மதுரை எய்ம்ஸ் வழக்கில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அவகாசம் தர முடியாது: மதுரை எய்ம்ஸ் வழக்கில் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்க கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்ததில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு 3 வாரம் அவகாசம் கேட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது வருத்தமளிக்கிறது என மதுரை உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

இன்று இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவு, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான திட்ட வரைவை மத்திய அரசு இதுவரை அனுப்பவில்லை என்றும், திட்ட வரைவு மத்திய அரசிடமிருந்து கொடுக்கப்பட்டால் அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திட்ட வரைவை தாக்கல் செய்யாமல் மேலும் மேலும் மத்திய அரசு அவகாசம் கேட்பது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசு விரைவாக பதில் மனு தாக்கல் செய்தால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான வரைவுக்கு மேலும் அவகாசம் தர முடியாது என மதுரை ஐகோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com