பாரம்பரியமாக வளர்த்த பள்ளி, ஒரு நொடியில் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்: மதுவந்தி பேட்டி

பாரம்பரியமாக வளர்த்த பள்ளி, ஒரு நொடியில் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்: மதுவந்தி பேட்டி

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி எங்களுடைய பாரம்பரியமான பள்ளி என்றும் அந்த பள்ளிக்கு என்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது என்றும் அந்த பெயரை ஒரு நொடியில் கெட்டுப் போக விடமாட்டேன் என்றும் ஒய்ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி பேட்டியளித்துள்ளார்.

பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் செய்த செயல் ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்றும், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியை பற்றி தவறாக ஒரு சிலர் எழுதுகிறார்கள் என்றும், என்னுடைய பாட்டி இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி உழைத்து வளர்த்த மிகப்பெரிய கல்விக்கூடம் அது என்றும், அந்தப் பெயர் கெட்டுப் போக நானும் என் அப்பாவும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மதுவந்தி கூறியுள்ளார்.

ஆசிரியர் ராஜகோபாலன் குறித்த சர்ச்சை எழுந்தவுடன் இரவு 12 மணிக்கு என் அப்பா பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பினார் என்றும், அந்த ஆசிரியரை அதன் அடிப்படையில் உடனடியாக சஸ்பெண்ட் செய்து விட்டார் என்றும், இது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை தந்திருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீதான விசாரணையில் தவறு நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் அதேசமயம் பள்ளியின் பெயரையும் அதை நடத்துபவர்களின் சாதியின் பெயரையும் இழுக்கக் கூடாது என்றும் சாதி மதத்தை கொண்டு அரசியல் பண்ண கூடாது என்றும் இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பள்ளியை நான் நடத்தவில்லை என்றும் வேண்டுமென்றால் செக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com