'ப்ளீஸ் வானதி சீனிவாசன்... இதை செஞ்சு கொடுங்க!'- தமிழக அமைச்சர் கோரிக்கை

'ப்ளீஸ் வானதி சீனிவாசன்... இதை செஞ்சு கொடுங்க!'- தமிழக அமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவி விட்டது என்றும், எனவே இங்கு மத்திய அரசின் உயர்மட்ட குழு வந்து, கொரோனா கட்டுப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். அதற்கு அவசியம் இல்லை என்று மறுத்துள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வானதி சீனிவாசனுக்கு வேறொரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

விருது நகரில், கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்கள் சந்திப்பின் போது, 'வானதி சீனிவாசன் சொல்வது போல தமிழகத்திற்கு மத்திய உயர் மட்ட குழு வந்து கொரோனா குறித்து ஆய்வு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

தமிழகத்திற்குத் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. அதை மத்திய பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் வானதி சீனிவாசன், மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com