தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா?

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ வல்லுனர்கள் உடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த ஆலோசனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com