சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு? விரிவான தகவல்!

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு? விரிவான தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து நாளைமுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து காய்கறி கடைகள், மளிகை கடை உள்பட அனைத்து கடைகளும் நாளை முதல் ஒருவாரத்திற்கு திறக்கக்கூடாது என்றும் பால், மருந்து கடைகள் தவிர வேறு கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஓட்டல்கள் ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சலுக்கு அனுமதி உண்டு.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் பேருந்து வசதிகள் செய்யப்படும் என்றும் அதனால் சொந்த ஊர் செல்பவர்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு விடிய விடிய சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் சென்ற நிலையில் இன்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பும் கடைசி பேருந்து குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து இன்று மார்த்தாண்டத்துக்கு இரவு 6 மணி, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு இரவு 7 மணி, செங்கோட்டைக்கு இரவு 7.30 மணி, நெல்லை, திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி, மதுரைக்கு இரவு 11.30 மணி, திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்திருப்பதுடன், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் தாம்பரம் பஸ் நிலையங்களுக்கு மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன என்பதும் இன்றும் இயக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com