கமல் கட்சியில் அடுத்த எலிமினேஷன் யார்? பிக்பாஸ் பாணியில் கலாய்த்த கஸ்தூரி!

கமல் கட்சியில் அடுத்த எலிமினேஷன் யார்? பிக்பாஸ் பாணியில் கலாய்த்த கஸ்தூரி!

உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில் தற்போது அந்த கட்சியில் இருந்து ஒரு சிலர் விலகி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியிலிருந்து பிரமுகர்கள் வெளியேறுவதை கலாய்க்கும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் போலவே அடுத்தடுத்து சந்தோஷ் பாபு,பத்மபிரியா ஆகியோர் விலகியுள்ளனர், அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த ட்விட்டை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகிய மூவரும் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகியதை அடுத்து மேலும் சிலர் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்களும் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும், நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபோதே அவர் கமல்ஹாசனை கலாய்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com