"லாட்டரி சீட்டை அரசே நடத்தினால் வருவாய் வரும்"- கார்த்தி சிதம்பரம் ஐடியா

"லாட்டரி சீட்டை அரசே நடத்தினால் வருவாய் வரும்"- கார்த்தி சிதம்பரம் ஐடியா

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக லாட்டரி சீட் விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதை மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

லாட்டரி சீட் விற்பனை என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் அது குறித்து தன் நிலைப்பாட்டையும் யோசனைகளையும் வழங்கியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

'லாட்டரி சீட் விற்பனை என்பது பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஏன், இந்தியாவிலேயே பல மாநிலங்களில் அது நடைமுறையில் தான் இருக்கிறது. எனவே அது தீண்டப்படக் கூடாதா யோசனை கிடையாது.

லாட்டரி சீட் விற்பனையை அரசாங்கமே ஏற்று நடத்தினால், அதில் லாபம் பார்க்க முடியும். அப்படி லாபத்தில் வரும் நிதியைக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தலாம். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்லூரிக் கட்டணத்தை அரசு செலுத்தலாம். இப்படி பல்வேறு நல்ல காரியங்களை செய்ய முடியும்.

லாட்டரி சீட் மோகத்தில் பலர் தங்கள் சொத்துகளையே இழந்துள்ளார்கள் என்று சொல்வதுண்டு. அதையும் முறைப்படுத்த முடியும். ஆதார் கார்டு மூலம் லாட்டரி வாங்குபவர்களை கண்காணித்து, குறிப்பிட்ட அளவிலான சீட்டுகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால், இதைப் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். எந்த புதிய யோசனைகளையும் விவாதித்து தான் முடிவுக்கு வர வேண்டும்' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com