கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்தியர் இவர்தான்!

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த இந்தியர் இவர்தான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலக நாடுகளில் உள்ள மனித இனத்தை ஆட்டி படைத்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா மட்டுமின்றி கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் இந்த நோய் வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியர் ஒருவர் மருந்து கண்டுபிடித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கருப்பு பூஞ்சை நோய்க்கு ’ஆம்போடெரிசின் பி’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தினால் படிப்படியாக குணமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரத் சீரம்ஸ் வாக்சின்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்த இவர் கருப்பு பூஞ்சை, நோய் உள்பட வேறு சில தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது கொரோனா நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர ஆராய்ச்சியில் உள்ளதாகவும் விரைவில் அவர் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, என கலர் கலராக நோய்கள் பயமுறுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com