PSBB விவகாரம்: ஒரு வழியாக வாய் திறந்தார் கமல்!

PSBB விவகாரம்: ஒரு வழியாக வாய் திறந்தார் கமல்!

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனமான பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பல ஆண்டுகளாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணி செய்து வருகிறார் என்றும், மாணவர்களுக்கு அவர் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லைக் கொடுத்து வருகிறார் என்றும் வரும் தகவல்கள் தமிழகத்தை அதிர வைத்துள்ளன.

இப்படிப்பட்ட முக்கியமான விஷயம் குறித்து கடந்த சில நாட்களாக முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தார். அவரின் மவுனம் தற்போது கலைந்துள்ளது.

பி.எஸ்.பி.பி விவகாரம் குறித்து கமல், 'ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும். குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com