சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? கமல் டுவிட்

சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? கமல் டுவிட்

சக மனிதரை காலில் விழ வைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா என கமல் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அவர்களில் ஒருவர் இயக்குனர் பா ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அரசின் கவனத்திற்கு சென்ற உடன் அதிரடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com