காய்கறி கடை மட்டுமல்ல, நகை, ஜவுளி கடையிலும் கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

காய்கறி கடை மட்டுமல்ல, நகை, ஜவுளி கடையிலும் கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் இரண்டு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவுக்கு வருவதை அடுத்து நாளை முதல் மீண்டும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் நேற்றும் இன்றும் ஊரடங்கு கிடையாது என்றும் அனைத்து கடைகளும் திறந்து கொள்ளலாம் என்றும் பேருந்துகளும் வாகனங்களும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த தவறான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் அனைவரும் வெளியே வரத் தொடங்கிவிட்டனர். காய்கறி மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தான் வாங்க வெளியே வருகிறார்கள் என்று பார்த்தால் தற்போது ஜவுளி கடைகளிலும் நகை கடையிலும் கூட கூடிய கூட்டத்தை பார்க்கும்போது கொரோனாவுக்கு கொண்டாட்டம் என தெரிகிறது.

ஊரடங்கு நேரத்திலும் தினசரி ஒரு சில மணி நேரங்கள் காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து இருக்கலாம் என்றும் தேவையில்லாமல் இரண்டு நாள் முழுவதும் ஊரடங்கை தளர்த்திவிட்டு, ஒரு வார காலத்திற்கு காய்கறி கடைகள் இல்லை என்று சொன்னது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த தவறான முடிவின் விளைவு அடுத்த சில நாட்களில் தெரியும் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com