அனைத்து கட்சி கூட்டமா? திமுக கூட்டணி கட்சி கூட்டமா?

இந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அல்லது அழைப்பை அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் நிராகரித்தார்களா?
அனைத்து கட்சி கூட்டமா? திமுக கூட்டணி கட்சி கூட்டமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படும் என ஏற்கனவே கூறியதை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சற்று முன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியல் இதோ:

விசிக - சிந்தனைச் செல்வன், பாலாஜி,

காங்கிரஸ் - விஜயதரணி, முனிரத்தினம்,

மமக - ஜவாஹிருல்லா

சி.பி.ஐ - ராமச்சந்திரன், மாரிமுத்து

சி.பி.எம் - சின்னதுரை, நாகை மாலி,

கொங்குநாடு - ஈஸ்வரன்

த.வா.க - வேல்முருகன்

புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி

மதிமுக - சின்னப்பா, பூமிநாதன்

மேற்கண்ட பட்டியலை பார்க்கும்போது திமுக கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அல்லது அழைப்பை அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் நிராகரித்தார்களா? என்று தெரியாத நிலையில் நெட்டிசன்கள் இந்த கூட்டம் குறித்து கருத்துக் கூறுகையில் இது அனைத்து கட்சி கூட்டமா? அல்லது திமுக கூட்டணி கட்சி கூட்டமா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com