சசிகலாவுடன் இணைகிறாரா ஓபிஎஸ்: ஈபிஎஸ் நிலை என்ன?

சசிகலாவுடன் இணைகிறாரா ஓபிஎஸ்: ஈபிஎஸ் நிலை என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதால் அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் ஆதரவால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை குறிவைத்து ஏமாற்றமடைந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சசிகலா பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சசிகலா மற்றும் தினகரன் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் இறங்கும் போது அவர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அந்தப் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அதிமுக இரண்டாக பிளவு ஆவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலை வந்தால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று ஈபிஎஸ் தரப்பினரும் இப்போது ஆலோசனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக இரண்டாகப் பிளந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதும் அது திமுகவிற்கு மேலும் சாதகமாகி விடும் என்பதால் அதிமுக பிரியாமல் சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து அதிமுக தொண்டர்களும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com