தடுப்பூசி போட்டதால் நான் உயிர் பிழைத்தேன்: மக்களுக்கு துரைமுருகன் விழிப்புணர்வு

தடுப்பூசி போட்டதால் நான் உயிர் பிழைத்தேன்: மக்களுக்கு துரைமுருகன் விழிப்புணர்வு

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசாம பொது மக்களுக்குப் போட்டு வருகின்றன. முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல சுகாதார ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 45 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் பொது மக்களில் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர மறுக்கிறார்கள். தடுப்பூசி குறித்து நிலவும் அச்சமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி முகாமில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'எனக்கு இதயத்தில் பை-பாஸ் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்த காரணத்தினால் முதலிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

அதன் பின்னரும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், அது என் உயிரைப் பறிக்கவில்லை. எதிர்ப்பு சக்தி இருந்த காரணத்தினால் நான் கொரோனாவிலிருந்து தப்பித்தேன். தடுப்பூசியால் தான் நான் உயிர் பிழைத்தேன். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என்று பேசியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com