வீடுகளில் சுயமாக மின்கணக்கீடு: எத்தனை யூனிட்டுகளுக்கு எவ்வளவு கட்டணம்?

வீடுகளில் சுயமாக மின்கணக்கீடு: எத்தனை யூனிட்டுகளுக்கு எவ்வளவு கட்டணம்?

இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம் என மின்வாரிய துறை அறிவித்துள்ளதை அடுத்து இந்த மாதம் நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் மீட்டரில் ரீடிங்கை கணக்கீட்டு மின்சார கட்டணத்தை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் சுயமாக கணக்கீடு செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்குமேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி எத்தனை யூனிட்டுக்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பார்ப்போம்.

100 யூனிட் வரை இலவசம்

110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம்

200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணம்

210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம்

290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணம்

390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணம்

500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணம்

510 யூனிட்டுக்கு 1846 ரூபாய் கட்டணம்

600 யூனிட்டுக்கு 2440 ரூபாய் கட்டணம்

700 யூனிட்டுக்கு 3100 ரூபாய் கட்டணம்

800 யூனிட்டுக்கு 3760 ரூபாய் கட்டணம்

1000 யூனிட்டுக்கு 5080 ரூபாய் கட்டணம்

1200 யூனிட்டுக்கு 6400 ரூபாய் கட்டணம்

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது மின் கட்டணம் அதிகமாக வந்ததாக புகார் எழுந்த நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுகர்வோர்கள் தாங்களே சுயமாக மதிப்பிட்டு, அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டு பின்னர் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மின் வாரிய ஊழியர்கள் நேரடியாக வ்ந்து ரீடிங் எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com