அரபிக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு!

காற்றழுத்த தாழவு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
அரபிக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு!

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

'தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதன் காரணமாக, குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழவு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் நாளை தேனி திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகி மாவட்டங்கள், கனியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்' என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com