சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறாக கூறிவிட்டேன்: எச்.ராஜா வருத்தம்!

சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறாக கூறிவிட்டேன்: எச்.ராஜா வருத்தம்!

சிவகார்த்திகேயன் தந்தை பெயரை தவறாக கூறி விட்டதாகவும் அதற்காக தான் வருந்துவதாகவும் ஆனால் அந்த தகவல் தவிர மற்ற அனைத்து தகவல்களும் தான் கூறிய அனைத்தும் உண்மையானது என்றும் எச் ராஜா பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜவாஹிருல்லா தான் காரணம் என்று ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ் என்றும் அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பத்திரிகையாளர்கள் விளக்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த எச் ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையினர் இருந்தவர் என்பதால் அவருடைய பெயரை தவறாக கூறி விட்டதாகவும் அது தன்னுடைய தவறுதான் என்றும் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது என்றும் அதற்காக தான் வருவதாகவும் கூறியுள்ளார். மற்றபடி அந்த தகவல் தவிர மற்ற அனைத்தும் தான் பேசி இது உண்மையே என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com