'பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு'- அமைச்சர் அதிரடி

'பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு'- அமைச்சர் அதிரடி

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளியின் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

"பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தைப் பொறுத்தவரை அது குறித்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவல் துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகிறது. பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட நபரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மீது வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிப்பட்ட குழு ஒன்றை அமைக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com