Breaking - ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு- எவற்றுக்கெல்லாம் தடை?

Breaking - ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு- எவற்றுக்கெல்லாம் தடை?

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதிக்குப் பின்னர் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்:

-மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள்.

-பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்

-பொது மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

-தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.

-தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

-உணவங்கங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் இந்த நேரங்களில் செய்யலாம்.

-பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்.

-ஏ.டி.எம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

-வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

-சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

-உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

-மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்கு பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

-செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

-தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

-பொது மக்கள் நலன் கருதி, இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

-வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் வெளியூல் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com