ரேஷன் கடைகள் இன்று முதல் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகள் இன்று முதல் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. காய்கறி கடைகள் மளிகை கடைகள் உள்பட எந்த ஒரு கடையும் திறக்க அனுமதி இல்லை என்றும் பால் மருந்தகங்கள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி உள்ளது. அதேபோல் எந்தவித போக்குவரத்து அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் ரேஷன் கடைகள் திறக்காததால் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரேஷன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com