தொடங்கியது முழு ஊரடங்கு: இன்னும் ஒரு வாரத்திற்கு எந்த கடையும் கிடையாது!

தொடங்கியது முழு ஊரடங்கு: இன்னும் ஒரு வாரத்திற்கு எந்த கடையும் கிடையாது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மே 10ஆம் தேதி முதல் மே 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்தது மட்டுமன்றி அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்த நிலையில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு உத்தரவு என தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும்) மற்றும் மருந்தகங்கள் ஆகியவை தவிர வேறு எந்த கடைகளும் திறப்பதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் கூட திறக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டதால் நேற்றும் நேற்று முன்தினமும் பொதுமக்கள் காய்கறிகளை மொத்தமாக வாங்கி கொடுக்க தொடங்கினர். இதனால் தனிமனித இடைவேளை காற்றில் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்பதால் இனிவரும் நாட்களிலாவது கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை சாலை முழுவதும் வெறிச்சோடி கிடந்தது என்பதும் வழக்கமாக திறக்கப்படும் டீக்கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com