இன்று முதல் பால்விலை குறைப்பு: பால் பாக்கெட்டுக்களின் புதிய விலை!

இன்று முதல் பால்விலை குறைப்பு: பால் பாக்கெட்டுக்களின் புதிய விலை!

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற அன்று ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார் என்பதும் அவற்றில் ஒன்று பால் விலை குறைப்பு என்பதும் தெரிந்ததே.

இந்த பால் விலை குறைப்பு மே 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று முதல் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் எந்தெந்த பால் என்ன விலை என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

ஆவின் பால் நீல நிறம்: ஒரு லிட்டர் ரூ.40 அரை லிட்டர் ரூ.20

ஆவின் பால் பச்சை நிறம்: அரை லிட்டர் ரூ.22

ஆவின்பால் ஆரஞ்சு: அரைலிட்டர்; ரூ.24 ஒரு லிட்டர் ரூ.48

ஆவின்பால் இளஞ்சிவப்பு நிறம்: அரைலிட்டர்: ரூ.18.50

டீமேட் பால்: ரூ.57 ஒருலிட்டர்

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com