தமிழகத்தில் மேலும் 4 ரயில்கள் ஜூன் 16 வரை ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 4 ரயில்கள் ஜூன் 16 வரை ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இருக்கும் காரணத்தினால் ஏற்கனவே பல சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது தென்னக ரயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் ஜூன் 16 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பயணிகள் வருகை குறைவு காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் ஜூன் 16 பின் அப்போதைய நிலைமையை பொறுத்து ரயில்கள் ஓடும் தகவல்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூன் 16 வரை ரத்து செய்யப்பட்டிருக்கும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்

2. சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில்

3. மதுரை - புனலூர்

4. சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில்

மேலும் மேற்கண்ட ரயில்களிலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்படும் என்றும் ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் எடுத்தவர்கள் கவுண்டர்களில் வந்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com