உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கா?

உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இ-பதிவில் இருந்து விலக்கா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே இபதிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் இபதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அவ்வாறு அத்தியாவசிய காரணமாக வெளியே வருவதாக இருந்தால் இபதிவு அவசியம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இபதிவு இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு மட்டுமே இபதிவு தேவையில்லை என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்த வரிசையில் தங்களுக்கும் இபதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவில் வரும் இந்த நிலையில் இபதிவு கட்டாயம் என்பதால் குறித்த நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்ய முடியாமல் தவிப்பதாக ஸ்விக்கி, ஜொமைட்டோ உள்பட உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கும் இபதிவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com