எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் பரபரப்பு குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதிமுகவிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மீது பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், 'திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜனை நான் பார்த்ததற்காக என்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்திருக்கலாம். என் மீது ஊழல் புகார் இருக்கும் காரணத்தினால் தான் அதிமுகவிலிருந்து நீக்கினார்கள் என்றால், பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் நிலுவையில் தானே உள்ளது.

இன்னும் சொல்லப் போனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதே ஊழல் புகார் இருக்கிறதே. எந்த ஊழல் புகார்களும் நிரூபிக்கப்படும் முன்னரே என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள். அப்படி என்னை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியையும் நீக்க வேண்டும் தானே' என்று கூறியு

நிலோபர் கஃபீல் நீக்கம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்ததாவது:-

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நீலோபர் கபீல், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

அறிக்கையில் நீலோபர் கபீலின் நீக்கத்துக்கு முழுமையான காரணம் என்னவென்பது குறித்து அதிமுக தரப்பிலிருந்து விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com