மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள்: முக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள்: முக ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் தினமும் சுமார் 35 ஆயிரம் வேறு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லாமல் உள்ளது. மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுங்கள் என தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியபோது, ‘இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என்றும், தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு இடம் கேட்டு ஆக்சிஜனை பெற்ற நிலையில் திமுக அரசும் அதேபோல் மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆலோசனையை ஏற்று முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசிடம் ஆக்சிஜனை கேட்டுப் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com