ஆன்லைன் மூலம் பொறியியல் கல்லூரி தேர்வு: தேதியை அறிவித்த அமைச்சர்

ஆன்லைன் மூலம் பொறியியல் கல்லூரி தேர்வு: தேதியை அறிவித்த அமைச்சர்

கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 16-ஆம் தேதி ஆன்-லைன் மூலம் நடைபெறும் என்றும் 2017 ரெகுலேஷன் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புக்கு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வுக்காக பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் ஜூன் 3-ஆம் தேதிக்குள் பணம் கட்ட வேண்டும் என்றும் ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் பணம் கட்ட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப் படுவதால் மாணவர்கள் இந்த தேர்வுக்கு ஒத்துழைக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் 2011ம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுதும் வசதியையும் அவர் அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் இன்று முதல் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com