'அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணுங்க!'- சொல்கிறார் எடப்பாடியார்

'அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணுங்க!'- சொல்கிறார் எடப்பாடியார்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர், 'தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும்,தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.

மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொது மக்களின் விலை மதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com