இ-பதிவு முறையில் மாற்றமா? நாளை அறிவிப்பு வெளிவரும் என தகவல்!

இ-பதிவு முறையில் மாற்றமா? நாளை அறிவிப்பு வெளிவரும் என தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும் மாவட்டத்திற்குள் செல்வதற்கும், மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என்ற நிலை உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இ-பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு நடைமுறை ரத்தாகும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பயணிப்பதற்கு இ-பதிவு முறை ரத்தாகும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இ-பதிவு முறையை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆட்டோ டாக்சிகளுக்கு இ-பதிவு முறை தொடரும் என்று கூறப்படுகிறது. ஆட்டோ டாக்சி மற்றும் வாடகை வாகனங்களுக்கு தற்போது உள்ள இ-பதிவு நடைமுறை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இபதிவு முறை ரத்து என்ற அறிவிப்பு வெளிவந்தால் ஏராளமான பொது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்பதும் குறிப்பாக ஆன்லைன் ஆர்டர்கள் எடுத்து டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பயன் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com