Connect with us

தமிழ்நாடு

அரசு கல்லூரி ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கிடைக்குமா? டாக்டர் ராமதாஸின் ‘திவால்’ அறிக்கையால் பரபரப்பு

Published

on

By

Nadigar Sangam Should Ban Acting In Smoking Scenes: Ramadoss

சமீபத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும். அந்த கல்லூரிகளின் பல்கலைக்கழகம் திவாலாகும் நிலை இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு ஊழியர்களின் ஊதிய செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தைச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழகங்களிடம் நிதி இல்லாத சூழலில், 41 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் ஊதியச் சுமையை ஏற்றுக் கொள்ள அவை தயாராக இல்லை. தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தான் அதிகபட்சமாக 10 உறுப்புக்கல்லூரிகளை நடத்தி வந்தது. அவை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் மாதத்திற்கு ரூ.1.51 கோடி தேவைப்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் ரூ.8.93 கோடி தேவைப்படும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ள தொகை ரூ.6.52 கோடி மட்டும் தான். அதனால் 10 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு தங்களால் ஊதியம் வழங்க முடியாது என பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாகவே கடிதம் எழுதிவிட்டார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுத்துள்ள அதே நிலைப்பாட்டைத் தான் மற்ற பல்கலைக்கழகங்களும் எடுத்துள்ளன. அவற்றின் நிலைப்பாடும் சரியானது தான். ஆனால், இந்த நிலைப்பாடு காரணமாக 41 அரசு கல்லூரிகளின் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைக்குமா? என்பது ஐயம் தான்.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 41 உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை 2018-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டு, அந்த ஆண்டில் 14 கல்லூரிகளும், 2020ஆம் ஆண்டின் இறுதியில் 27 கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அவற்றுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், ஊதியப் பொறுப்பையும் அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

1 அரசுக் கல்லூரிகளுக்கும் ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.167 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்த தமிழக அரசு, கல்லூரிகளின் நிர்வாகப் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும் வரை ஊதிய செலவைப் பல்கலைக்கழகங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தத் தொகையை அரசு திருப்பித் தரும் என்று அறிவித்தது. அந்த வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54.09 கோடி உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ரூ.200 கோடிக்கும் கூடுதலாக வழங்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களின் செலவுகளைச் சமாளிக்க அந்தத் தொகையைத் திருப்பித் தரும்படி நிர்வாகங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதையும் வழங்காமல், ஊதியத்தையும் பல்கலைக்கழகங்களே தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது சரியல்ல. அச்சுமையை பல்கலைக்கழகங்களால் தாங்க முடியாது. பல்கலைக்கழகங்களின் நோக்கம் கல்லூரிகளை நடத்துவது அல்ல. ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆகும். கல்லூரிகளை நடத்துவது அரசின் பொறுப்பு ஆகும்.

ஆனால், ஊரகப்பகுதிகளில் உயர்கல்வி வழங்க புதிய கல்லூரிகளைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்ட போதெல்லாம், அவற்றை அரசு தொடங்காமல், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்க ஊக்குவித்தது. இது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். பல்கலைக்கழகங்களின் நிதிநிலையைச் சிறப்பாக இருந்தவரை இந்தக் கல்லூரிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகங்களின் நிதிநிலையை மோசமான நிலையில், உறுப்புக் கல்லூரிகளை அவற்றால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அத்தகைய சூழலில் கல்லூரிகளை நடத்தும் பொறுப்பிலிருந்து பல்கலைக்கழகங்களை விடுவித்து விட்டு, அப்பொறுப்பையும், ஊதியச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்வது தான் முறையாகும். மாறாக, 41 அரசு கல்லூரிகளின் ஊதியச் செலவை பல்கலைக்கழகங்களின் தலையில் சுமத்தினால் அடுத்த சில ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடும். இப்போதே பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்க நிதியில்லாமல் வைப்பு நிதியில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்து வருகின்றன. நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பெரிய அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. சி

ல பல்கலைகளில் ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்களை வழங்குவதற்குக் கூட நிதி இல்லை. இத்தகைய சூழலில் 41 அரசுக் கல்லூரிகளின் ஊதிய செலவையும் பல்கலைக்கழகங்களின் மீது சுமத்தினால், அவை எதிர்பார்த்ததை விட இன்னும் வேகமாக திவாலாகிவிடக் கூடும். அதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது. எனவே, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் கருதி அவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.200 கோடிக்கும் கூடுதலான நிலுவையையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
தமிழ்நாடு23 mins ago

ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்1 hour ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/10/2021)

தமிழ் பஞ்சாங்கம்2 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/10/2021)

சினிமா செய்திகள்2 hours ago

’அண்ணாத்த’ படத்தை கைப்பற்றிய உதயநிதி: ‘எனிமி’ ரிலீஸ் ஆகுமா?

இந்தியா2 hours ago

இந்தியாவில் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்!

இந்தியா2 hours ago

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை: இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (28/10/2021)

சினிமா செய்திகள்3 hours ago

தல அஜித்தின் பைக் பயணம்: முதல்முறை வெளியான மாஸ் வீடியோ!

தமிழ்நாடு3 hours ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு மிக கனமழை என எச்சரிக்கை

தமிழ்நாடு3 hours ago

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத ஏற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ10 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ10 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ10 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ10 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ10 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ10 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!