யாஸ் புயல் கரையை கடப்பது எப்போது? தயார் நிலையில் மீட்புப்படையினர்!

யாஸ் புயல் கரையை கடப்பது எப்போது? தயார் நிலையில் மீட்புப்படையினர்!

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் கரையை கடப்பது எப்போது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து நிவாரண படைகள் தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவான யாஸ் புயல் வரும் 26-ஆம் தேதி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இடையே இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இருமாநில அரசுகள் மீட்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விமானப்படையும் இந்த முறை களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நிவாரணப் பொருட்கள் மீட்பு தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 600க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மே 26-ஆம் தேதி கரையை யாஸ் புயல் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பாக கொல்கத்தா வாரணாசி பகுதியில் மீட்பு படையினர் புயலை எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாட்னா, கொல்கத்தா, அந்தமானின் போர்ட் பிளேயர் வரையிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com