தமிழகத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?- அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?- அமைச்சர் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தீர்வாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 18 கோடி பேருக்கு மட்டும் தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மக்கள் தொகைக்கு தடுப்பூசி போட்டு முடிக்க இந்த ஆண்டு இறுதி வரை ஆகும் என்று தகவல்கள் சொல்கின்றன.

இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி முதல் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் போதுமான தடுப்பூசி இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் தமிழகத்தில் இன்று வரை துவங்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் இருப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சில நாட்களுக்கு முன்னர் உலகளாவிய டெண்டர் மூலம் மாநிலத்துக்கு தடுப்பூசி பெறப்படும் என்றும், அதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com