கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது; எவ்வளவு வீணாகியுள்ளது?

கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது; எவ்வளவு வீணாகியுள்ளது?

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் மும்முரமாக நடந்து வரும் நிலையில் அது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சு கூறியதாவது:-

கொரோனா தொற்றின் முதல் அலையில் சுமார் 13 சதவீத தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தில் வீணடிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த சிக்கல் இல்லை. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் தோறும் தடுப்பூசியை எடுத்துச் செல்வதற்கு அனைத்து வீத சீறிய திட்டங்களும் தமிழக அரசால் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். மிக அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 2.53 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுவரை தமிழகத்தில் 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இனி வரும் காலங்களில் இந்த தடுப்பூசி போடும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com