'சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது'

'சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது'

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மிகப் பெரும் ஆயுதமாக பார்க்கப்படுவது தடுப்பூசிகளே. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இப்படி அனுமதி கொடுத்தால் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் சில நாட்களுக்கு முன்னர் தான் ஆரம்பிக்கப்பட்டது. தடுப்பூசி பற்றாக்குறையால் திட்டம் ஆரம்பிக்கப்படுவது தாமதாகியது.

இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

'ஞாயிற்றுக் கிழமையான இன்று இதுவரை 20 ஆயிரம் பேர் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியிருக்க வேண்டும். மக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம் கொரோனா நோய்த் தொற்று வராது. அப்படி வந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருக்கும்' என்று கூறியுள்ளார் ககன்தீப் சிங் பேடி.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com