கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 30 ஆயிரத்துக்கு மேலே பாதிப்பு எண்ணிக்கை!

கொரோனா: தமிழகத்தில் தொடர்ந்து 30 ஆயிரத்துக்கு மேலே பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று புதிதான 33,361 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்தம் 3,13,048 ஆக்டிவ் கேஸ்கள் இருக்கின்றன. மேலும் இன்று சிகிச்சை முடித்து 30,063 பேர் டிஸ்சார் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 474 பேர் தொற்றால் உயிரழந்தது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில் தொற்று எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தாலும், இறப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்தே உள்ளது.

மாநிலத்திலேயே மிக அதிகப்படியாக கோவையில் 4,734 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னையில் 2,779 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருது நகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்துக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு உயர் விகிதத்தில் இருப்பதால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com