எத்தனை தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின் கீழ் சிகிச்சை?- அமைச்சர் விளக்கம்

எத்தனை தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின் கீழ் சிகிச்சை?- அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சைப் பெற்றாலும் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இது கொரோனா காலத்தில் பலருக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், 'தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின் கீழ் சிகிச்சைப் பெறும் விஷயத்தைப் பொறுத்தவரை, 890 தனியார் மருத்துவமனைகளில் அது செய்யப்படுகிறது. பொது மக்கள் இந்த தனியார் மருத்துவனைகளில் சிகிச்சைப் பெற்றும் பயனடையலாம்.

தனியார் மருத்துவமனைத் தரப்பிடமும் நாங்கள், அவர்கள் மருத்துவமனைகளில் அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்தும் வகையில் விளம்பரம் செய்ய வலியுறுத்தி வருகிறோம்' என்று தெரிவித்து உள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தான், தமிழகத்தின் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு எப்படி கட்டணம் விதிக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com