நாளை முதல் தமிழகத்தில் கடுமையாகும் ஊரடங்கு: தமிழக அரசு 5 தீர்மானங்கள்!

நாளை முதல் தமிழகத்தில் கடுமையாகும் ஊரடங்கு: தமிழக அரசு 5 தீர்மானங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று நடந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

1.கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தருவது.

2.அனைத்துக் கட்சியினரும் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சி நிகழ்வுகளை முற்றிலுமாக நிறுத்துவது.

3.கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு குறித்து மக்களை அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடப்பது என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4.நோய்த் தொற்று குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

5.தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

திங்கட் கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் சரிவர பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதைத் தீவிரப்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com