மதுரையில் தீ போல பரவுது கொரோனா: செல்லூர் ராஜூ வேதனை!

மதுரையில் தீ போல பரவுது கொரோனா: செல்லூர் ராஜூ வேதனை!

தமிழகத்தில் தற்போது, கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்படும் நகரமாக இருப்பது மதுரை. அதேபோல மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

மதுரை மாவடத்தில் தீ பரவுவது போல பரவிக் கொண்டிருக்கிறது. புயல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சியும் இங்கு இருக்கும் அரசு நிர்வாகமும் கொரோனாவைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சொல்வதை தினம் தினம் செய்திகளில் பார்க்கிறோம். ஆனால், உண்மை நிலை அப்படியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனவே உடனடியாக தொற்றுப் பரவலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விஷயத்திலும், குறிப்பிட்ட சிலருக்குத் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் சில முறைப்படுத்துதல்கள் வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளுக்கு முறையான மற்றும் சத்தான உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com